முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி: வெற்றிகரமாக விண்ணில் ஏவியது நாசா

ஞாயிற்றுக்கிழமை, 26 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சமும், உயிரினங்களும் உருவானதன் ரகசியத்தை கண்டறியக் கூடிய, உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நாசா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி ஆய்வு மையங்களுடன் இணைந்து, ‘ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்’ எனும் உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கி உள்ளது. இதை உருவாக்கும் பணி கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கியது. 2007-ல் முடிக்க திட்டமிட்ட இப்பணி பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது. பின்னர், பல்வேறு கடின முயற்சிகளுக்குப்பின், ரூ.75,000 கோடி மதிப்பில் பிரமாண்டமான இந்த தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

இதை விண்ணில் ஏவும் நிகழ்வு நடந்தது. பிரான்சின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு விண்வெளி மையத்தில் இருந்து, ‘ஏரியன் 5 ராக்கெட்’ மூலம் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இந்திய நேரப்படி நேற்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட அடுத்த அரை மணி நேரத்தில் தனது விண்வெளியை அடைந்தது. அங்கிருந்து அது தனது ஆன்டனா மூலமாக வெற்றிகரமாக சிக்னல் அனுப்பிக் கொண்டே, சூரியனின் சுற்றுவட்டப் பாதையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.

இதன் மூலம், நாசா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பிரபஞ்சத்தில் 14 ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது, இந்த உலகமும், உயிரினங்களும் எப்படி உருவாகின என்பன போன்ற ரகசியங்களை தேடுவதற்காக, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டிருக்கிறது. 

இந்த பிரமாண்ட தொலைநோக்கி தனது மேம்பட்ட திறன்களை பயன்படுத்தி சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களை இன்னும் தெளிவாக ஆய்வு செய்யும் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து