முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்: காங்கிரஸ் கட்சியினருக்கு சோனியா வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 28 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்ட 137-வது ஆண்டு தினமான நேற்று காங்கிரஸ் கட்சியினருக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் 137வது ஆண்டு கொண்டாட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியாகாந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் கொள்கைகளை மறைமுகமாக தாக்கி பேசினார். அவரது பேச்சின் விபரம் வருமாறு.,

இந்திய ஜனநாயகத்தையும், கலாச்சாரத்தையும் காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாக்க வேண்டும். காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல. அது ஒரு இயக்கம். அதன் தலைவர்கள் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு இன்னல்கள் சந்தித்துள்ளனர்.

சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். தங்கள் வாழ்வையே அவர்கள் இழந்துள்ளனர்.  ஆனால் நாட்டை பிளவு படுத்தும் வெறுப்பு மற்றும் பிரிவினை சிந்தாந்தவாதிகளுக்கு சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை. தற்போது அந்த சிந்தாந்தம் நமது சமூகத்தின் மதசார்பற்ற கட்டமைப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு அதன் மதிப்பு தெரிவதில்லை. இந்திய அடித்தளத்தின் மீதே தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படுகின்றன. நமது பண்பாடு சிதைக்கப்படுகிறது. பொதுமக்கள் பயம் மற்றும் பாதுகாப்பில்லா உணர்வுடன் வாழ்க்கின்றனர். இவ்வாறு சோனியா காந்தி தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!