முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீங்கள் பிரதமராகும் வாய்ப்புள்ளதா? சரத்பவாரின் சுவாரஸ்யமான பதில்

வியாழக்கிழமை, 30 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

2024 மக்களவை தேர்தல் முடிவு வெளியான பிறகு, நீங்கள் பிரதமராக வாய்ப்புள்ளதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அரசாங்கத்தை வழிநடத்துவதை விட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் நபரை ஆதரித்து வழிகாட்ட விரும்புகிறேன் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். 

கடந்த 2019-ம் ஆண்டு, மகராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கு பிறகு முதல்வர்  பொறுப்பு தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறி கூட்டணியிலிருந்து வெளியேறியது.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தார். இதனை தொடர்ந்து, முதல்வராக தேவேந்திர பட்னாவிஸூம் துணை முதல்வராக அஜித் பவாரும் பொறுப்பு ஏற்று கொண்டனர். ஆனால், சரத் பவாரின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதால், தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவை அவரால் பெற முடியவில்லை. பின்னர், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. 

இதற்கு மத்தியில், பா.ஜ.க.வுடன் உறவை முறித்து கொண்ட அஜித் பவாருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த அரசியல் நிகழ்வு குறித்து மனம் திறந்துள்ள சரத் பவார், பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அஜித் பவாரை தான் அனுப்பியிருந்தால், அந்த கூட்டணி தொடர்ந்து ஆட்சியில் இருப்பதை தான் உறுதி செய்திருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மராத்திய நாளிதழான லோக்சட்டா ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், நான் அவரை (அஜித் பவாரை) அனுப்பியிருந்தால், அவர்கள் ஆட்சியில் தொடர்ந்து இருந்திருப்பார்கள். அதனை நான் உறுதி செய்திருப்பேன். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், நிர்வாக அனுபவமுள்ள மற்ற அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று கூறினார். 

2024 மக்களவை தேர்தல் முடிவு வெளியான பிறகு, நீங்கள் பிரதமராக வாய்ப்புள்ளதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அரசாங்கத்தை வழிநடத்துவதை விட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் நபரை ஆதரித்து வழிகாட்ட விரும்புகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து