முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று அதிகரிப்பு: அமெரிக்காவில் ஒரே நாளில் 2,600 விமானங்கள் நிறுத்தம்

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 600 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானும் அதிவேகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் வைரஸ் பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இதனால் உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 600 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.  பிளைட்அவேர் என்ற கண்காணிப்பு இணையதளத்தின்படி, சர்வதேச அளவில் சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் 500 விமானங்களையும், ஏர் சீனா 200 விமானங்களையும் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 600 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.  கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் காரணமாக டிசம்பர் மாதம் 24-ம் தேதி  முதல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இவை தவிர கடினமான வானிலை காரணமாக சிகாகோவில் உள்ள விமான நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து