முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொழுது போக்கை விட உயிர் முக்கியம். ஆர்.கே.செல்வமணி பேட்டி

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைமை அலுவலகத்தில் அந்த அமைப்பின் தலைவர்  ஆர்.கே.செல்வமணி  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடனான ஃபெப்சி அமைப்பின் 23 சங்கங்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிவுற்றது. பேச்சுவார்த்தை 6 மாதங்கள் நடைபெற்றது. 7 வருடங்களாக ஊதியம் உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் மூலம் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 40 முதல் 50 சதவீத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். ஊதிய உயர்வு தை மாதம் முதல் அமலுக்கு வரும். முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் , இதற்காக முதல்வரிடம் நேரம் கேட்டுள்ளோம் என்றார். மேலும், படப்பிடிப்பில் ஃபெப்சி தொழிலாளர்கள் கண்டிப்பான முறையில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது  சம்மேளனம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும். இரவு 10 மணிக்குள் ஊழியர்கள் வீடு சென்று சேரும் விதமாக படப்பிடிப்பு நடைபெறும் . பொழுதுபோக்கை விட உயிர்ப் பாதுகாப்பு முக்கியம். தற்போதைய ஊரடங்கால் திரையரங்கில் தர்மத்துக்கு படம் ஓட்டும் நிலைதான் இருக்கிறது . ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டால் தான் திரையரங்கிற்கு கூட்டம் வரும். மத்திய , மாநில அரசுகள் கொரோனா காலத்தில் தொழிற் சாலைகளுக்கு செய்யும் உதவிகளை திரைப்படத் துறைக்கும் செய்ய வேண்டும் என ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து