முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி: ராயபுரம் ரேசன் கடையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சென்னை ராயபுரத்தில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்தவகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பொங்கல் தொகுப்பு வாங்க முகக்கவசம் அணியாமல் வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலருக்கு அவர் முகக்கவசம் அணிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து