முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ரெயின்போ புரொடக்சன்ஸ் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே. இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராகக் இயக்குநர் பேரரசுவும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும் விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருந்தால் பொழுது போக்கு தளத்தை விட்டு சினிமா விலகிவிடும்.  அப்புறம் மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. பொழுதுபோக்கு படங்கள் வந்தால் தான் சினிமா சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம் என்றார். அதனைத் தொடர்ந்து படத்தின் நாயகன் ராஜ்கமல் பேசுகையில்,  இந்தப் படத்தில் நடித்தபோதும் இதில் பேசப்படும் பிரச்சினையைப் பார்க்கும் போதும் என் இரண்டு மகள்கள் தான் எனக்குக் தெரிந்தார்கள். அந்த அளவிற்கு பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களை எச்சரிக்கிறது இந்தப் படம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து