முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக அளவில் கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் : இந்தியாவை பாராட்டி அமெரிக்க நிபுணர் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : உலக அளவில் கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அறிவியல் நிபுணர் தெரிவத்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அறிவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல்  இயக்குநர் டாக்டர் குதுப் மஹ்மூத், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை. இந்திய தடுப்பூசிகள் உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.  இந்தியாவில் ஒரு வருடத்திற்குள் 60 சதவீத தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்திய சுகாதாரத்துறை மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் இந்த நடவடிக்கை கொண்டாடப்படுவதற்கு உரிய சிறந்த சாதனை.

கொரோனா ஒரு தனித்தன்மை வாய்ந்த வைரஸ் ஆகும், ஏனெனில் இது மிக அதிக மாறுதல்களை  கொண்டுள்ளது. கொரோனா தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும். இந்த ஆண்டில் தொற்றுநோயிலிருந்து மிக விரைவில் நாம் வெளிவருவோம் என்று நம்புகிறேன். அதன் பரவலைக் கட்டுப்படுத்த நாம் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு  டாக்டர் குதுப் மஹ்மூத் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து