முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினம் கொள் விமர்சனம்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

இலங்கை போருக்கு பின்னான மக்களின் பாதிப்புகளும் அவர்களின் மன நிலையையும் சொல்லும் படமே இந் சினம் கொள். இனி ஆயுதத்தைக் கையால் தொடுவதில்லை, அமைதி வழியே தன் வழி என்று இருக்கும் ஒரு முன்னாள் போராளியின் மீது பெண் கடத்தல் பழி விழுகிறது. அதிலிருந்து எவ்வாறு மீண்டு தன் மேல் பழி விழக் காரணமான கும்பல் எது என்பதைக் கண்டுபிடித்து கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதே படத்தின் கதை. ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் OTTயில் பொங்கலன்று வெளியாகி உள்ளது. இலங்கைவாழ் தமிழர்களுடைய இயல்பு வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் நம் கண் முன்னே காண்பித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப். இலங்கையில் அசலான பகுதிகளுக்குச் சென்று படப்பதிவை செய்துள்ளனர். இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வு பற்றித் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் என அனைவருமே பார்க்க வேண்டிய படம் இந்த சினம் கொள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து