Idhayam Matrimony

பிரபல கதக் நடன கலைஞர் பிர்ஜூ மஹாராஜ் காலமானார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : பிரபல கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜூ மஹாராஜ், மாரடைப்பு  காரணமாக தனது 83 வயதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார். தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடிய போது திடீரென மயங்கி சரிந்த அவரை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கிட்னி பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு டாயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. பண்டிட் பிர்ஜூ மஹாராஜின் கலை சேவையை பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினை கடந்த 1986-ல் வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புகழ்வாய்ந்த கதக் நடனக் கலைஞர் பண்டித பிர்ஜு மகாராஜ் அவர்கள் மறைந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கதக் கலையின் மிகச் சிறந்த தூதராக விளங்கிய அவர் வளமான ஒரு மரபைக் கொடையாக விட்டுச் சென்றுள்ளார். அவரது மறைவு நமது நாட்டுக்கும் கதக் கலைக்கும் மிகப் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து