முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் நபர்களால் கொரோனா சற்று உயரலாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புபவர்களால் கொரோனா சற்று உயரலாம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசை பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது., கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவியது. தினசரி பாதிப்பு சென்னையில் 8 ஆயிரம் என்ற அளவுக்கு எகிறியது. நேற்று முன்தினம் குறைந்துள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் ஏராளமானோர் திரும்பி கொண்டிருக்கிறார்கள். இந்த ஒன்று கூடுதலால் அடுத்த ஒரிரு நாட்கள் தொற்று சற்று அதிகரிக்கலாம்.

இருப்பினும் கொரோனா தொற்று விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். தொற்று எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருப்பது ஆறுதலானது. அரசை பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறோம். ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 2700, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2050, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 1600, படுக்கைகளும் நந்தம்பாக்கம் கொரோனா சிறப்பு மையத்தில் 950, ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், கேளம்பாக்கம், தாம்பரம் சித்த மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் தலா 100 படுக்கைகளும் தயாராக உள்ளது.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 91 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இதில் 8 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. ஆனாலும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்வது கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள், இரு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளுங்கள். 60 வயதை கடந்தவர்களில் 90 லட்சம் பேர் இன்னும் 2-வது தவணை ஊசி போட்டுக்கொள்ளவில்லை. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைவரும் தடுப்பூசியை விரைவாக போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து