ஆவின் நிறுவனத்தில் உள்ள 'கால்நடை ஆலோசகர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

250 ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் தெரிவித்ததன் அடிப்படையில் அதன் உரிமையாளர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஆனாலும் தனியார் ஆம்னி பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. இதை பயன்படுத்தி ஒருசில ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்து இருந்தார். மேலும் இதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது 250 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் தெரிவித்ததன் அடிப்படையில் அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தவிர அநேக ஆம்னி பஸ்கள் வரி செலுத்தாமல் இருந்தது தெரிய வந்தது. போக்குவரத்து துறை விதிகளை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுக்கள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு பெரும்பாலானவர்கள் சென்னை திரும்புகிறார்கள். இதனால் ஆம்னி பஸ்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் 18004256151 என்ற இலவச தொலைபேசி வழியாக புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் அரசு நிர்ணயிப்பதில்லை. இதனால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்கிறார்கள். இதுபற்றி பொதுமக்கள் புகார் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் முகமது அப்சல் கூறியதாவது.,
இந்த தொழில் ஏற்கனவே நசுங்கி விட்டது. மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு தொழிலை செய்து வருகிறோம். பொங்கலுக்கு 3-ல் ஒரு பகுதி ஆம்னி பஸ்களே இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் கூட இடங்கள் முழுமையாக நிரம்பவில்லை. ஆனாலும் டீசல் விலை மற்றும் வரி உயர்வு இத்தொழில் மோசமாக நிலைக்கு செல்ல காரணமாக அமைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
ஐபிஎல்-லில் தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக மகத்தான சாதனையை படைத்த பும்ரா
22 May 2022மும்பை : ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் : இந்திய அணி அறிவிப்பு : கே.எல்.ராகுல் கேப்டனாக நியமனம்
22 May 2022மும்பை : ஐ.பி.எல்.
-
டெல்லி அணியை பழிக்கு பழிவாங்கிய மும்பை : 4 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரசியம்
22 May 2022மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
-
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு : புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு
22 May 2022மும்பை : ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி நடைபெற இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
23 May 2022எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவகாரத்தை பொறுத்தவரை எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் இடம் கிடையாது என சீனா தெரிவித்துள்ளது.
-
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
இலங்கையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்பு
23 May 2022இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இதுவரை 13 பேர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.