முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 5-வது நாளாக தமிழகத்தில் 23,000-க்கும் அதிகமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன் 23,443 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று கொரோனாவிலிருந்து சுமார் 15,036 பேர் மீண்டுள்ளனர். அதேநேரம், 29 பேர் கொரோனாவினால் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 13 பேர் தனியார் மருத்துவமனையிலும், 16 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

நேற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து, சுமார் 1,61,171 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதுவரை தமிழகத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கையானது 29,87,254 என உயர்ந்துள்ளது. அதேபோல பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,89,045 என்றும், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,038 என்றும் ஆகியுள்ளது.

இப்படியாக நேற்று 5 ஆம் நாளாக 23,000 க்கும் மேல் பதிவாகி உள்ளது. சென்னையில் 28.7 ஆக பாசிட்டிவிட்டு பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 28.7 என்றிருந்த நிலையில், நேற்று அதேபோலவே உள்ளது. தமிழகத்தின் பாசிட்டிவிட்டி ரேட், நேற்று முன்தினம் 17 என்றிருந்த நிலையில் அது நேற்று 16.7 என குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஐசியூவில் 833 பேர் உள்ளனர்.

பாதிப்பு அதிகம் உறுவாகியிருப்பது, நேற்றும் சென்னையில்தான். அந்தவகையில் சென்னையில் நேற்று 8,305 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கோவை (2228), செங்கல்பட்டு (2143) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து