முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் தலிபான் கமாண்டர், அவரது மகன் உள்பட 6 பேர் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

ஆப்கானிஸ்தானில் தலிபான் கமாண்டர், அவரது மகன் உள்பட 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டுதான் தலிபான் படையினர் மீண்டும் ஆட்சியை பிடித்தனர். பின்னர் பல மாதங்களாகவே அங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டது. உலக நாடுகளும் தலிபான் அமைப்பை அங்கீகரிக்க தயங்குவதால், ஆப்கன் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்கு குனார் மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் தலிபான் கமாண்டர், அவரது மகன் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். 

நரங் மாவட்டத்தில் தலிபான் கமாண்டர், அவரது மகன் மற்றும் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டின் உளவுத்துறை அதிகாரிகள், இதை உறுதி செய்து. தனிப்பட்ட விரோதம் காரணமாக மக்கள் கொல்லப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 17-ம் தேதி மேற்கு ஹெராத் மாகாணத்தில் உள்ள காசிமி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தலிபான் துணை அமைப்பினர் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் டிரைவர், மற்றும் டாக்டர் கொல்லப்பட்டனர். இப்படி தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து