முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா எல்லையில் பனியில் உறைந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

அமெரிக்க - கனடா எல்லைப் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கைக்குழந்தை உள்பட நான்கு பேர் கடும் பனி காரணமாக உறைந்து பலியாகியுள்ளனர். கனடா எல்லைக்குள் உறைந்த நிலையில் பலியாகியிருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்க எல்லைக்கு அதுகே, கனடா நாட்டின் எல்லைக்குள், இரண்டு பெரியவர்கள், ஒரு சிறார் மற்றும் ஒரு கைக்குழந்தையின் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கனடா நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றிருக்கலாம் என்றும், மோசமான வானிலை காரணமாக இவர்கள் பலியாகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் மனிதர்களைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து