முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணியில் ராஜஸ்தானை சேர்ந்த ரவி பிஷ்னோய் அறிமுகம்

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் ராஜஸ்தானை சேர்ந்த ரவி பிஷ்னோய் அறிமுகமாகிறார். அறிமுகம் குறித்து தெரிவித்த அவர் இந்திய அணியில் விளையாடுவது தனக்கு பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணம்...

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 6-ம் தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்தனர். இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் புதுமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அசத்தியவரான 21 வயதான ரவி பிஷ்னோய் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்தியாவுக்காக...

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. ரோகித் தலைமையிலான டி-20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் இடம் பிடித்துள்ளார். 

பஞ்சாப் அணிக்கு...

ராஜஸ்தானை சேர்ந்த 21 வயதான பிஷ்னோய் 2020 அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்திருந்தார். 2020, 2021 என இரண்டு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் இந்த லெக் ஸ்பின்னர். தற்போது லக்னோ அணிக்காக விளையாட உள்ளார். இந்த நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. 

எனக்கு பெருமை...

“இந்திய அணியின் ஜெர்ஸியில் நான் ஜொலிக்க உள்ளதை எண்ணி பெருமை கொள்கிறேன். எனது கனவு நிஜமாகி உள்ளதாக உணர்கிறேன். எனது வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். அதற்காக என்னை தயார் படுத்திக் கொண்டிருந்தேன். என்னை இயல்பாக விளையாட வைத்த அனில் கும்ப்ளே சாருக்கு நன்றி. அவர் என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக வடிவமைத்தார். கே.எல்.ராகுலுடன் லக்னோ அணியில் இணைந்து விளையாடுவதும் சிறப்பான வாய்ப்பு” என சொல்லியுள்ளார் ரவி பிஷ்னோய்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து