முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் உ.பி.யை நம்பர்-1 ஆக்குவோம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்

சனிக்கிழமை, 29 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

உத்தர பிரதேசத்தில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் உ.பி.யை நம்பர்-1 ஆக்குவோம் என்று அவர்களிடத்தில் தெரிவித்தார்.

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களுக்கு மீண்டும் பயணம் மேற் கொண்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று உத்திர பிரதேசத்தின் முசாபர்நகர் மற்றும் சஹாரன்பூரில் நாள் முழுவதும் பொது நிகழ்ச்சிகளிலும், வீடு வீடாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார்.

வாக்குசேகரிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர்,  சமாஜ்வாதிக் கட்சியும், ரஷ்ட்ரிய லோக்தள் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது குறித்து விமர்சித்தார். சமாஜ்வாதிக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ரஷ்ட்ரிய லோக்தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் வாக்கு எண்ணும் வரை மட்டுமே ஒன்றாக இருப்பார்கள். சமாஜ்வாதி ஆட்சி அமைந்தால் அசம் கான் அமர்வார்,  ஜெயந்த் பாய் வெளியேறுவார். தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று அவர்களது வேட்பாளர்கள் பட்டியலே வெளிப்படுத்தும். 

நீங்கள் வாக்களிப்பதில் தவறு செய்தால், லக்னோவில் கலவரக்காரர்கள் ஆட்சிக்கு வருவார்கள். அவர்களது ஆட்சி அமைந்தால் மீண்டும் மாஃபியா ராஜ்ஜியம் வரும், சாதிவெறி வரும். பாஜகவுக்கு வாக்களித்தால் உத்தர பிரதேசத்தை நம்பர்-1 ஆக்குவோம். இவ்வாறு அமித் ஷா தமது பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!