முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்: தேர்தலில் தனியாக நின்று ஜெயித்த வரலாறு அ.தி.மு.க.வுக்கு உள்ளது: ஜெயகுமார் பேட்டி

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

எதிர்காலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும் என்றும், தேர்தலில் தனியாக நின்று ஜெயித்த வரலாறு அ.தி.மு.க.வுக்கு உண்டு என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.க.வுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இருந்தது, அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இதில் கூட்டணி இல்லை. பா.ஜ.க. தனியாக நிற்கிறது. எங்களது தலைமையில் சில கட்சிகளுடன் சேர்ந்து நாங்களும் மக்களை சந்திக்க இருக்கிறோம்.

எதிர்வரும் காலத்தில், அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதே போல் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, அவர்களுடைய விருப்பத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த விருப்பத்தை கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். எதிர்காலம் குறித்து எங்களது கட்சியே முடிவு செய்யும்.

இன்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லை, ஆனால் அவர்களின் நல்லாசி உள்ளது. எங்களுடைய வெற்றி சின்னம், இரட்டை இலைச் சின்னம், மேஜிக் சிம்பல். அது எங்களிடம் உள்ளது. இவ்வளவு பிளஸ் பாயின்ட், அது தவிர அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், அதை எல்லாம் மக்கள் இன்று நினைத்துப் பார்த்துக் கொண்டுள்ளனர்.

சிங்கம் சிங்கிளாகத்தான் வரும். அ.தி.மு.க. சிங்கம். அதனால் அந்த சிங்கம் வந்து வெற்றி பெறும். மற்றதெல்லாம் எப்படியும் கூட்டமாகத்தான் வரும். எங்களைப் பொறுத்தவரை வரலாறு இருக்கு, தனியாக நின்று ஜெயித்த வரலாறு இருக்கு. அந்த சிங்கத்துடைய வரலாறுதான் எங்களுடைய வரலாறு. சிங்கிளாகவே வந்து சில கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெறுவோம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து