முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமானில் உள்ளாட்சி தேர்தல்: அண்ணாமலை தீவிர பிரச்சாரம்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

அந்தமானில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் செய்தார். 

அந்தமான் யூனியன் பிரதேசத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்குள்ள போர்ட் பிளேர் நகராட்சி, சோர்ப் பாய்ன்ட் பேரூராட்சி, ஹோப் டவுன் பேரூராட்சி, பம்பு பிளட் பேரூராட்சி ஆகிய இடங்களில், தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு, அண்ணாமலைக்கு தேசிய தலைமை அழைப்பு விடுத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை அந்தமான் சென்ற அண்ணாமலை, போர்ட் பிளேரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து