முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கதிர் நடிக்கும் இயல்வது கரவேல்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி மாணவராக நடித்த கதிர், மீண்டும் முழுக்க முழுக்க கல்லூரியை கதைகளமாக கொண்ட புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.  சென்னையில் உள்ள ஒரு பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் அரசியலை அடிப்படையாக கொண்ட  இந்த படத்திற்கு ‘இயல்வது கரவேல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. எஸ். எல். எஸ். ஹென்றி’ எழுதி இயக்கும் இப்படத்தை எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான யுவலக்ஷ்மி இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ‘மாஸ்டர்’ மகேந்திரன், கரு. பழனியப்பன், ஆடுகளம் நரேன், ஸ்மைல்சேட்டை அன்புதாசன், லகுபரன் போன்றோர் இப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிப்ரான் இசைஅமைகிறார் . ஒளிப்பதிவாளராக ஸ்ரீதர், கலை இயக்குனராக மாயப்பாண்டி, படதொகுப்பாளராக தியாகு மற்றும் மக்கள் தொடர்பாளராக ரியாஸ் கே அஹ்மத் ஆகியோர் இணைந்திருப்பது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த மாதம் படபிடிப்பு தொடங்க உள்ளது. திண்டிவனம், புதுச்சேரி மற்றும் வடசென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து