முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கும் மூப்பில்லா தமிழே தாயே

சனிக்கிழமை, 26 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

வரும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் மூப்பில்லா தமிழே தாயே என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். துபாய் எக்ஸ்போவில் ரஹ்மானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், மாஜாவின் YouTube சேனலில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது. இந்த தனி ஆல்பம் பாடல் உலகம் முழுக்க பல தளங்களில் இந்த வாரம் வெளியிடப்படுகிறது. பாடலாசிரியர் தாமரை எழுதிய இந்தப் பாடல் உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாடல் பற்றி குறிப்பிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பெருமையுடன் பார்க்க வேண்டும் என மக்களைக் கேட்டுக்கொண்டார். சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இவர்களுடன் ரக்‌ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோர் கூடுதல் குரல்கள் கொடுத்துள்ளனர். மாஜா தயாரித்துள்ள  இப்பாடலை, Studio MOCA வின் அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து