முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் 4 முதல் சுப்ரீம் கோர்ட்டில் முழு அளவில் நேரடி விசாரணை: தலைமை நீதிபதி அறிவிப்பு

புதன்கிழமை, 30 மார்ச் 2022      இந்தியா

சுப்ரீம் கோர்ட்டில் வரும் வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 4) முதல் முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவித்துள்ளார்.

 

கொரோனா பாதிப்பு காரணமாக, காணொலி காட்சி வாயிலாகவும், வாரத்தில் இரு நாள்கள் நேரடியாகவும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வரும் வாரத்திலிருந்து முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்குரைஞர்கள் கோரிக்கை வைத்தால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய நடைமுறைகள், வரும் திங்கள்கிழமை முதல் சுப்ரீம் கோர்ட்டில் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து