முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Amarnath 2022 04 11

கொரோனா பரவலுக்கு பிறகு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நேற்றுமுதல் தொடங்கியது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்திரீகர்கள் வருகை தருவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை. 

இந்த நிலையில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அமர்நாத் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. அமர்நாத் ஆலய இணைய தளம் மற்றும் மொபைல் செயலி மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அமர்நாத் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அமர்நாத்திற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ரம்பன் மாவட்டத்தில் மூவாயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் யாத்ரி நிவாஸ் அமைக்கப்பட்டுள்ளதாக அமர்நாத் ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதிஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து