முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின கூட்டம்: நளினி சிதம்பரம் நீட்டுக்கு ஆதரவாக வாதாடியபோது தி.மு.க. ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

திங்கட்கிழமை, 2 மே 2022      தமிழகம்
Sellur-Raju 2022 05 02

Source: provided

மதுரை : மதுரையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றமே தின கூட்டத்தில் நளினி சிதம்பரம் நீட்டுக்கு ஆதரவாக வாதாடியபோது தி.மு.க. ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று முன்னாள்  அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசினார்.

மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் தலைமையில் செல்லூர் 50 அடி ரோட்டில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் ஆர்.கோபாலகிருஷ்ணன், வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, பா.குமார், ஏ. பார்த்திபன், சோலைராஜா, பரவைராஜா,சக்தி மோகன், சண்முகவள்ளி, கு.திரவியம், ஆர்.பாஸ்கரன், எம்.எஸ்.கே.மல்லன்,  உசிலை தவசி, எம்.ரவிச்சந்திரன், பி.ஆர்.சி.ஜெயராஜ், அனுப்பானடி பாலகுமார், ராஜசேகரன், எம்.கணேசன், பூக்கடை முருகன், மதுரா கோட்ஸ் சுப்புராஜ்,  பி.ஆர்.சி.சுந்தரமூர்த்தி, பாலமுருகன், விஜயபாண்டியன், பைக்காரா கருப்பசாமி, மாயத்தேவன், பாலமுருகன், கலைச்செல்வன், திருமுருகன், முத்து முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ஒரு நடிகரால், எம்ஜிஆர் அரிதாரம் பூசி நடிப்பவரால் கட்சி நடத்த முடியுமா என விமர்சித்தவர்கள் மத்தியில் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு 50 ஆண்டுகாலம் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஆட்சி திமுக ஆட்சி.  505 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்து திருவிழாவில் குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பதை போல ஏமாற்றிவிட்டனர்.7 நாளில் ஏழு பேரை விடுதலை செய்வோம், நீட் விலக்கு தருவோம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து பேசிவிட்டு இன்று ஆளுநர் மீது பழியை போட்டுள்ளனர். இந்தியா முழுவதும் நீட் இருக்க வேண்டும் என்று வாதாடியவர் நளினி சிதம்பரம். அவர் ப.சிதம்பரத்தின் மனைவி. அன்று காங்கிரசுடன் கூட்டணி வைத்தது திமுக. திமுக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் கொண்டு வரப்பட்டது.நளினி சிதம்பரம் நீட்டுக்கு ஆதரவாக வாதாடிய போது திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த போது நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம். நளினி சிதம்பரத்தை கண்டிக்கிறோம் என திமுக கூறினார்களா? திமுகவினர் நாடகம் போடுகின்றனர்.திமுகவின் அடுத்த வாரிசு உதயநிதி.அவர் என் தந்தை தான் வருவார். எங்களுக்கு நீட் விலக்கு வாங்க தெரியும் என உதயநிதி சொன்னார். தற்போது வரை நடந்ததா?

பெட்ரோல் டீசல் விலையை குறைத்து சொன்னதை செய்தார் பிரதமர் நரேந்திரமோடி.உக்ரைன் ரஷ்யா பெட்ரோல் பெட்ரோல் டீசல் விலை, குருடாயில் விலை உயர்ந்து படிப்படியாக உயர்ந்தது.பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தபோது மாநில அரசுகள் வரியை குறைத்தன. ஆனால் தமிழக அரசு செய்யவில்லை.

 திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு, விலைவாசி உயரும்.கஞ்சி தொட்டி, கப்பை கிழங்கு, பலாக்கொட்டையை வேக வைத்து சாப்பிடும் அவலநிலையை உருவாக்கிய ஆட்சி திமுக. இன்றைக்கும் அந்த நிலை தான் உள்ளது.ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு எல்லாம் மூடுவிழா நடத்துகிறார்கள். நீங்கள் பேசுவது எல்லாம் ரெக்கார்டு ஆகிக்கொண்டுள்ளது.

கூட்டுறவுத்துறை குறித்து பேச 20 நிமிடம் கொடுத்துவிட்டு முதல்வரும், அமைச்சர்களும் எனக்கு பதில் கூறியே 1மணி நேரம் பேசுகின்றனர். சட்டமன்றத்தில் நான் அமைச்சராக இருக்கும் போது பாடிய பாடலை இன்று அதே துறை அமைச்சர் எனக்கு பாடி காட்டுகிறார் பங்காளி இதை ஏற்கனவே பாடிவிட்டேன் எனக்கூறினால் சிரிக்கிறார்கள்.நாங்கள் தவறு செய்திருந்தால் கண்டுபிடியுங்கள். நடவடிக்கை எடுங்கள்.மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. ஏனென்றால் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து