முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகேசிடம் டோனி கூறியது என்ன...?

திங்கட்கிழமை, 2 மே 2022      விளையாட்டு
Mukesh-2022-05-02

ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி ஓவரில் பந்து வீசுவதற்கு முன் டோனி கூறியது என்ன என்பது பற்றி முகேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.

கேட்ச்சை தவற...

4 விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணை புரிந்த முகேஷ் போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 6வது ஓவரில் ஒரு விக்கெட் கூட போகவில்லை.  ஒரு கேட்ச்சை தவற விட்டேன் என எனக்கு தெரியும்.  ஆனால், விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும்.  நல்லவேளையாக அது நடந்தது என கூறினார்.

எதுவும் கூறவில்லை...

கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற 38 ரன்கள் தேவையாக இருந்தது.  அந்த ஓவரை முகேஷ் வீசினார்.  அதற்கு முன் டோனி அவரிடம் என்ன கூறினார் என்பது பற்றி கூறிய முகேஷ், அந்த ஓவரில் டோனி சிறப்பாக எதுவும் என்னிடம் கூறவில்லை.  ஸ்டம்புக்கு மிக நெருக்கத்தில் பந்து வீசும்படி கூறினார்.  ஆர்வகோளாறில், ஏதேனும் வித்தியாச முறையை கையாள முயற்சிக்க வேண்டாம் என்று மட்டும் கூறினார் என முகேஷ் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து