முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

புதன்கிழமை, 4 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஆலம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக சிவகாசி வட்டம், கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருபத்தைந்தே வயதான சோலை விக்னேஷ், (த/பெ  சோலை குருசாமி) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் மூன்று லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து