முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      விளையாட்டு
Suryakumar-2022-05-10

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் இடதுகையின் தசைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தபோட்டி தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகினார். 

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த 6-ந் தேதி நடந்த ஆட்டத்தின் போது காயம் அடைந்த சூர்யகுமார் யாதவின் நிலைமை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உடல் தகுதிநிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக அவரை அணியில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்தது.  அவர் அடுத்த மாதம் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு முன்பாக உடல் தகுதியை எட்டி இந்திய அணியில் இடம் பிடிக்க முடியுமா? என்றகேள்விக்குறி எழுந்துள்ளது. 

நடுவர் மீது தவறுதலாக  பந்தை எறிந்த பொல்லார்ட்

15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 56-வது லீக் ஆட்டத்தில்  ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மும்பை அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது 10-வது ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பொல்லார்ட் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை வீச பொல்லார்ட் ஓடிவர, அவரது கையில் இருந்த பந்து தவறுதலாக பின்புறமாக சென்று நடுவர் மீது பட்டது. நடுவரிடம் உடனடியாக பொல்லார்ட்மன்னிப்பு கோர அதற்கு நடுவர் புன்னகைத்தார்.

கோலிக்கு தனது திறமை மீது சந்தேகம் - பாக். முன்னாள் வீரர் 

தொடர்ந்து கோலி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லதீப் பேசியுள்ளார். கோலி குறித்து அவர் கூறுகையில், 

"நான் இதை முன்பே சொன்னேன். அவர் டாப் ஆர்டரில் பேட் செய்ய வேண்டும் அல்லது கீழே இறங்கி பேட் செய்ய வேண்டும். தொடக்க வீராக களமிறங்கியது அவருக்கு கைகொடுக்காததால் அவர் இப்போது தனது பேட்டிங் ஆர்டரில் கீழே இறங்கலாம். ஆனால் அவர் இப்போது அவர் தனது சொந்த திறமையை சந்தேகிக்கிறார். அது அவருக்கு வேலை செய்யாது. அவர் தனது பேட்டிங் ரிதம்-யை ஒருமுறை கண்டு அறிந்துவிட்டால் அதன்பின் அவர் மோசமான ஃபார்மில் இருந்து வெளியே வந்துவிடுவார்" என ரஷீத் லதீப் தெரிவித்தார்.

அணி வீரர்களை தேர்வு செய்வதில்  சிஇஓ-வின் தலையீடு - ஸ்ரேயாஸ் 

ஐ.பி.எல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி பின்னர் சரிவை சந்தித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை 12 போட்டிகளில் 5-வெற்றி, 7- தோல்வி என புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடந்த சீசன் வரை டெல்லி அணிக்காக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் கொல்கத்தா அணி நிர்வாகத்தால் வாங்கப்பட்டார்.

போட்டி முடிந்த பிறகுபேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறுகையில்,"  நாங்கள் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடுவோம். அதில் அணியின் தலைமை செயல் அதிகாரியும் ஈடுபடுவார் . அணி வீரர்களிடம் போட்டியில் நீங்கள் இல்லை என்று சொல்வதற்கே கடினமாக உள்ளது " என ஸ்ரேயாஸ் குறிப்பிட்டார். போட்டியை பொறுத்தவரை அன்று அணியில் யார் விளையாட வேண்டும், விளையாட கூடாது என முடிவு எடுக்கும் அதிகாரம் கேப்டன்-யிடம் உள்ளது. பயிற்சியாளர் உடன் கலந்தாலோசித்த பிறகு கேப்டன்கள் பிளேயிங் லெவனை தேர்வு செய்வார்கள். ஆனால் அந்த முடிவில் அணி நிர்வாகத்தின் வேறு யாரும் தலையிட்டால் அது அணியின் முன்னேற்றத்துக்கு தடையாக அமையலாம் என்றார்.

ஆசிய கோப்பை ஹாக்கி: 2 தமிழக வீரர்களுக்கு இடம்

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் நடக்கிறது. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபிந்தர்பால் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களான எஸ்.மாரீஸ்வரன், எஸ்.கார்த்தி ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ஜூனியர் மற்றும் சீனியர் முகாமில் உள்ளனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு விளையாட்டு மைய விடுதி மாணவர்கள் ஆவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து