முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த தமிழகத்தில் மாவட்டம் தோறும் செஸ் போட்டிகளை நடத்த முடிவு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      விளையாட்டு
Chess-Olympiad 2022 05 17

சென்னையில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த தமிழகத்தில் மாவட்டம் தோறும் செஸ் போட்டிகளை நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 

186 நாடுகள்...

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

நேரில் காண...

இந்த நிலையில், சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செஸ் போட்டிகளை நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியில் முதலிடம் பிடிப்போர் 3 நாட்கள் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் காண அனுமதிக்கப்படுவர் என்றும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து சிறப்பாக விளையாடும் 2 மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடரை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலா ரூ.1 லட்சம்...

மேலும், போட்டிகளை நடத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க 2007 ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்கு பின் பிறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!