முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து 12 பேர் பலி : பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு

புதன்கிழமை, 18 மே 2022      இந்தியா
Gujarat 2022 05 18

Source: provided

காந்திநகர் : குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் அமைந்துள்ளது சாகர் உப்பு தொழிற்சாலை. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில், சாக்கு மூட்டையில் உப்பு நிரப்பும் பணி நடந்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 20 முதல் 30 தொழிலாளர்கள் புதையுண்டு இருக்கலாம் என்றும், ஆனால் இதுவரை இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய மற்றவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்வதாக மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரும் உள்ளூர் எம்எல்ஏவுமான பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்தார். மேலும், சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " மோர்பியில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து இதயத்தை உருக்குகிறது. இந்த துக்க நேரத்தில் என் எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் இருக்கும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

மோர்பியில் நடந்த சோகத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து