முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு

புதன்கிழமை, 25 மே 2022      தமிழகம்
School-Education 2022 02 11

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வு தொடங்கும் தேதி உள்ளிட்ட அறிவிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று காலை வெளியிட்ட நிலையில், காலாண்டு அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் தேதியுடனே, பொதுத் தேர்வு தொடங்கும் தேதியும் அறிவிக்கப்படுவது என்பது மாணவ, மாணவிகளுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

இந்த நிலையில், பொதுத் தேர்வுகள் தொடங்கும் தேதி மட்டுமல்லாமல், அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டு, அரையாண்டுத்தேர்வு தொடங்கும் தேதி மற்றும் விடுமுறைக் காலம், விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதியும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள்  எப்போது என்பது குறித்த விவரம்..

2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கும். 1 முதல் 10-ம் வகுப்பு வரை செப்டம்பர் 26 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடக்கம். செப்டம்பர் 30 தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடையும்.

அதுபோல, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கும். டிசம்பர் 19ஆம் தேதி 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு  அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கும்.

அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி முடிந்து 2023ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி விடுமுறை முடிந்த மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். அதுபோல, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 முதல் 26ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!