முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும்: ரணில் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

சனிக்கிழமை, 28 மே 2022      உலகம்
ranil-2022-05-12

இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும் என பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனா். இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடா்பான 21-வது சட்ட திருத்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என மூத்த அரசியல் தலைவா்கள் முடிவு செய்துள்ளனர்.  

சட்ட திருத்த மசோதா குறித்த ஆலோசனை கூட்டம் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. இதில் 21-வது சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது.  அதன் பின் வெளியான அறிக்கையில், 21-வது சட்ட திருத்த மசோதா கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒருமித்த கருத்து கூட்டத்தில் எட்டப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.  எனவே அடுத்த மாதம் 3-ம் தேதி மீண்டும் கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசியலமைப்பின் 21-வது திருத்தத்தை நிறைவேற்றுவது குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டதில் மகிழ்ச்சி என்று பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தனது டுவிட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 21-வது திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து