முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம்: நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி

புதன்கிழமை, 1 ஜூன் 2022      அரசியல்
Naynar nakentiran-2022--06

பா.ஜ.க.வுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என்று தமிழக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது, 

தமிழக முதல்வர் கேட்டதற்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 2 முறை குறைத்துள்ளது. அதே விகிதாச்சாரப்படி மாநில அரசும் விலையை குறைக்க வேண்டும்.  மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தி.மு.க.வினர் குறிப்பிட வேண்டாம் என்று சட்டப்பேரவையில் பேசிய பிறகும் கூட மாற்றிக் கொள்ளவில்லை. தி.மு.க. அரசு தன்னை பெருமைப்படுத்திக் கொள்கிறதே தவிர, மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை.

மத்திய அரசு தேவையான நேரங்களில் கொடுக்க வேண்டிய நிதியை மாநிலங்களுக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதைத் தரவில்லை என்று குற்றம் சாட்டுவதே தி.மு.க. அரசு நோக்கமாக கொண்டுள்ளது.  மத்திய அரசிடம் தமிழக முதல்வர் ஒரு தொகையை கேட்கிறார். நிதியமைச்சர் ஒரு தொகையை கேட்கிறார். இவர்களுக்குள்ளே கருத்து வேறுபாடு உள்ளது. 

சசிகலாவை சேர்த்து விட்டால் அ.தி.மு.க. இன்னும் வலுவாக இருக்கும். பா.ஜ.க.வுக்கு அவர் வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவரது வருகை பா.ஜ.க.வினருக்கு உறுதுணையாக இருக்கும். அ.திமு.க.வில் அவர் இல்லையென்றால், பா.ஜ.க.வுக்கு இணைவதற்கு நாங்கள் முன்னெடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து