முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2022      வர்த்தகம்
Gold 2022 05 03

Source: provided

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ரூ.38,400-க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கம் விலை கடந்த வாரம், இந்த வார தொடக்கத்திலும் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கம் ஒரு பவுன் ரூ.38,200 என்ற விலையிலேயே தொடர்ந்து விற்பனையானது. கடந்த 30-ம் தேதி (திங்கட்கிழமை) அது ரூ.38,280 ஆக உயர்ந்தது. அதன்பிறகு 31-ம் தேதி மீண்டும் ரூ.38,200 ஆக குறைந்தது. 1-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.37,920 ஆக குறைந்தது.

அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பவுன் விலை ரூ.38,080 ஆக உயர்ந்தது. நேற்று மேலும் உயர்வடைந்து ரூ.38,400 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் நேற்று முன்தினம் ரூ.4,760-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.4,810-க்கு விற்பனையானது.

இதேபோல் வெள்ளி விலையும் நேற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.68.50-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து