Idhayam Matrimony

ரூபாய் நோட்டுகளில் தாகூர், கலாம் படங்கள் இடம்பெற வாய்ப்பில்லை : ரிசர்வ் வங்கி விளக்கம்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      இந்தியா
Reserve-Bank 2022-06-05

Source: provided

புதுடெல்லி : ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளில் தாகூர், கலாம் படங்கள் இடம்பெற வாய்ப்பில்லை என்று விளக்கமளித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடவுள்ள ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி அவர்களின் படம் இடம்பெற்றுள்ளது. 

இதற்கிடையே ரிசர்வ் வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) ஆகியவை மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் இரண்டு செட் மாதிரிகளை ஐஐடி-டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், " ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக மற்றவர்களின் படத்தை மாற்றவுள்ளதாக ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளி வந்துள்ளன. ரிசர்வ் வங்கியில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து