முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராசிட்டமால் உட்பட 16 மருந்து, மாத்திரைகள் டாக்டர் பரிந்துரை சீட் இல்லாமல் வாங்கலாம் : மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2022      இந்தியா
Mansuk-Mandavia 2022 05 08

Source: provided

புதுடெல்லி : பாராசிட்டமால் உட்பட 16 மருந்து, மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை சீட் தேவையில்லை என்ற முடிவை மத்திய சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது. 

இருமல், சளி, வலி, தோல் பிரச்சினைகள் போன்றவற்றுக்கான மருந்துகளை விற்பதில் தளர்வுகளைக் கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி 1945இல் கொண்டுவரப்பட்ட மருந்துச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய சுகாதாரத் துறை பருந்துரைத்துள்ளது. இதற்காக 16 மருந்துகள் அடங்கிய K பட்டியல் ஒன்றைப் பரிந்துரைத்திருக்கிறார்கள். 

இந்த நடைமுறையால் மருத்துவரிடம் மருந்து பரிந்துரை சீட் பெறாமல், குறிப்பிட்ட மருந்துகளை விற்பனையாளர்கள் விற்க முடியும். பொதுவான மருந்துகளை மக்கள் எளிதில் வாங்குவதற்காக, இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  பரிந்துரைக்கப்படும் மருந்துகளை நேரடியாக மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அதற்கு மருத்துவரின் மருந்துச் சீட்டு அவசியம் இல்லை. கிருமி நாசினியான போவிடோன் அயோடின், பல் ஈறு அழற்சிக்கான குளோரெக்சிடின், க்ளோட்ரிமாசோல், பாராசெட்டமால் உள்ளிட்ட 16 மருந்துகள் இதில் அடக்கம்.

குறிப்பாக கிருமிநாசினிகள், ஈறு அழற்சி சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மவுத்வாஷ் குளோரோஹெக்சிடின் (குளோரோஹெக்சிடின்), டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபிரோமைடு லோசன்ஜ்கள், பாக்டீரியா எதிர்ப்பு முகப்பரு மருந்து, பூஞ்சை எதிர்ப்பு கிரீம்கள், வலி நிவாரணி மருந்துகள் ஆகியவை அடங்கும். அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்கு மேல் இந்த மருந்துகளை நோயாளிக்கு கொடுக்கக் கூடாது. அவரை மருத்துவரின் ஆலோசனையைப் பெற அறிவுறுத்த வேண்டும். இது தொடர்பான ஆலோசனைகளை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

மத்திய அரசின் இந்தப் பரிந்துரை ஏற்றுச் சட்ட திருத்தம் கொண்டுவரும் பட்சத்தில் மருந்துக் கடைகள், இந்தப் பருந்துகளையும் நேரடியாக சீட்டுகள் இல்லாமல் விற்கலாம். இதனால் உடனடியாகப் பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும். அதே நேரம் இந்த மருந்துகளை வாங்கி உட்கொண்டு ஐந்து நாட்களுக்கு மேல் குணமாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!