முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14-ம் தேதி முதல் தே.மு.தி.க. நகர, ஒன்றிய செயலாளர்களுடன் 3 நாட்கள் பிரேமலதா ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      தமிழகம்
Premalatha 2022 06 10

Source: provided

சென்னை  தே.மு.தி.க. நகர, ஒன்றிய செயலாளர்களுடன் பகுதி, பேரூர் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தே.மு.தி.க.வை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தே.மு.தி.க. தொடர்பான முடிவுகளை பிரேமலதாவே எடுத்து வருகிறார். 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிரேமலதா செயல்பட்டு வருகிறார். இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து தே.மு.தி.க. நகர, ஒன்றிய செயலாளர்களுடன் பகுதி, பேரூர் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ச்சியாக 3 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் பிரேமலதா கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார். இந்த கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் பின்னர் தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து