முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி: ஆந்திர மாநிலத்தில் 34 மாணவர்கள் தற்கொலை செய்ததால் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      இந்தியா
Andhra 2022 06 10

Source: provided

திருப்பதி : ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் விரக்தியடைந்து 34 பேர் தற்கொலை செய்து கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கடந்த 3-ந் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்வில் 70.70 சதவீத மாணவிகளும், 64.02 சதவீத மாணவர்களும் வெற்றி பெற்றனர். 4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 2 லட்சம் மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்தனர். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் விரக்தியடைந்து 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆறுதல் கூறினார். அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நாரா லோகேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து