முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன்: சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
ks alagiri-2022-05-12

Source: provided

சென்னை : சோனியா, ராகுல் ஆகியோரின் செயல்பாட்டை முடக்குவதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனை கண்டித்து சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

இது குறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சுதந்திர போராட்டத்தின் போது கடந்த 1938-ம் ஆண்டு லக்னோவில் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை நேரு தொடங்கினார். 2008-ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்டு, நவ் ஜீவன், குவாமி அவாஜ் ஆகிய செய்தி தாள்களும் வெளியாகவில்லை. 2016 -ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி 3 செய்தித்தாள்களையும் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது. நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை மீண்டும் தொடங்க ராகுல், சோனியா முயற்சி எடுத்தனர். இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. 

மத்தியில் நடைபெற்று வரும் மோடி ஆட்சியை எதிர்த்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வரும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் செயல்பாட்டை முடக்குவதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இத்தகைய பழிவாங்கும் போக்கை கண்டிக்கும் வகையில், எனது தலைமையில், சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பாக நாளை 13-ம் தேதி (திங்கட்கிழமை காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து