முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெனிவா ஜி-33 அமைச்சர்களின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2022      உலகம்
Piyush-Goyal 2022 06 12

Source: provided

ஜெனிவா ; ஜெனிவாவில் நடைபெறும் ஜி-33 நாடுகளின் அமைச்சர்களின் கூட்டத்தில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளார். 

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் ஜி-33 நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளார். அங்கு அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் தய்யை சந்திக்க உள்ளார். 

வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-33 அமைப்பில் தற்போது 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தக் கூட்டமைப்பில் இந்தியாவை தவிர சீனா, இலங்கை, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.2003 ஆம் ஆண்டு இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து