முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் பலியான 3 பேர் குடும்பத்திற்கு தலா 3 ரூபாய் லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      தமிழகம்
cuddalore2022-06-23

Source: provided

சென்னை : கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் வாணவேடிக்கை தயாரிக்கு பட்டாசு ஆலை நேற்று இயங்கி வந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஆலையின் அறை முழுவதும் தரைமட்டமானது. இந்த விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

இந்நிலையில் கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,

கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெரியகரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (வயது 35), நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா (வயது 50) மற்றும் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (வயது 34) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். 

உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதே விபத்தில் காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா என்பவருக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தலா ரூபாய் மூன்று லட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து