முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : Aதமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், 

பொதுப்பிரிவில் 31 சதவீதம், எஸ்.டி. ஒரு சதவீதம், எஸ்.சி. 18 சதவீதம், எம்.பி.சி. 20 சதவீதம், பி.சி.எம். 3.5 சதவீதம், பி.சி. 26.5 சதவீதம் இடஒதுக்கீட்டை பின்பற்ற அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான

பட்டியல் தயாரிக்க வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து