முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதா : இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      உலகம்
Gotabhaya 2022 04

Source: provided

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கு, அந்நாட்டு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

கடந்த 2015-ல், இலங்கையின் அப்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, நாடாளுமன்ற அதிகார வரம்பிற்குள் அதிபரை கொண்டு வரும் வகையில், அரசியல் சாசனத்தில் சட்டத் திருத்தத்தை செய்தார்.

இந்த சட்டத்தை, 2020-ல் அதிபர் கோத்தபய ராஜபச்சே ரத்து செய்து, அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டத்தை அமல்படுத்தினார். இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடிக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே தான் காரணம் எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, அதிபரின் அதிகாரத்தை குறைத்து, அவரை நாடாளுமன்றத்தின் கீழ் செயல்பட வைக்கும் அரசியல் சாசனத்தின், 21-வது சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சியான சமாகி ஜனா பாலவேகயா தாக்கல் செய்தது.

இந்த மசோதா சட்ட வடிவம் பெறுவதற்கு முன், பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், அரசியல் சாசனத்தின் 22-வது சட்டத் திருத்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. 

அதிபரை நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை வழங்கும் இந்த வரைவு மசோதாவுக்கு, மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்துள்ளதாக, செய்தி தொடர்பாளர் பண்டுலா குணவர்த்தனா தெரிவித்து உள்ளார். இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து