முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நளினி விடுதலை கோரிய வழக்கு: தமிழக அரசு தரப்பில் தெரிவிக்காத கருத்துக்களை நீக்கியது ஐகோர்ட்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

சென்னை : ராஜிவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான தீர்மானத்தை கவர்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பியது சரி என அரசு வாதிட்டதாக பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய அதிமுக, ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி அதை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்தார்.

இதையடுத்து, கவர்னர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த 17ம் தேதி  தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வு  தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில், தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்காத கருத்துக்கள் மற்றும் வாதங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த பகுதியை நீக்க வேண்டும் என்று உள்துறை இணை செயலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு  கவர்னர்  அனுப்பி வைத்தது சரி என்று தலைமை வழக்கறிஞர் தன் வாதத்தில் கூறியதாக தீர்ப்பில் உள்ளது.

ஆனால், அவர் அப்படி எதுவும் கூறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து, கவர்னரோ அல்லது ஜனாதிபதியோ கையெழுத்திட வில்லை என்றால், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தலைமை வழக்கற்ஞர் கூறியதாக தீர்ப்பில் உள்ளது.இந்த கருத்தையும் அவர் தெரிவிக்க வில்லை. அதனால் நளினி மனு மீதான தீர்ப்பை திருத்த வேண்டும் எனவும், தலைமை வழக்கறிஞர் கூறாத வாதங்களை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை நீக்கி உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து