முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய டிவி ஷோவில் பங்கு பெறும் பிக்பாஸ் புகழ் நடிகை

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
photo

Source: provided

பிக் பாஸில் தமிழக ரசிகர்கள் மனதில் பச்செக்கென்று ஒட்டிக் கொண்டவர் மரியா ஜூலியானா அதாவது நடிகை ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவரது படங்களை சோஷியல் வெப்சைட்டுகளில் வைரலானதைத் தொடர்ந்து ஊடக வெளிச்சம் இவர் மீது விழுந்தது.

இதைத் தொடர்ந்து தான் இவர் பிக்பாஸ் உள்ளிட்ட டிவி புரோக்ராம்களில் தோன்றி அசத்தினார். தற்போது தவமாய் தவமிருந்து என்ற பெயரில் புதிய டிவி தொடர் ஒன்று தயாராகிறது. இதில் பிரதான பாத்திரத்தின் தோழியாக நடிக்கும் இவரை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தந்தை, மகள் பாசத்தை மையமாக தயாராகி வரும் இந்த நிகழ்ச்சியில் ஜூலி முக்கிய வேடமேற்றுள்ளார். தவமாய் தவமிருந்து தயாரிப்பாளர்கள் வெளியிட்ட புரோமோவில் ஜூலி தோன்றும் காட்சிகள் ரசிகர்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

ஏற்கனவே பிக்பாஸை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட்டிலும் பங்கேற்று தமிழக ரசிகர்களின் மனதில் அழுத்தமான முத்திரையை பதித்தவர் ஜூலி.பிக்பாஸ் அல்டிமேட் மூலம் இவரது இமேஜ் ரசிகர்கள் மத்தியில் மேலும் உயர்ந்து வருகிறது. தற்போது தவமாய் தவமிருந்து புரோமோ இவருக்கு மேலும் இமேஜை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து