முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகே ஹாங்காங்கிற்கு ஜனநாயகம் துவங்கியது : சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      உலகம்
Xi-Jinping 2022 07 01

Source: provided

பெய்ஜிங் : சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். 

சீனாவுடன், ஹாங்காங் இணைந்து 25 ஆண்டுகள் முடிவடைவதை தொடர்ந்து இரண்டு நாட்கள் விழா நடைபெறுகிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஹாங்காங் நிர்வாக தலைவராக ஜான் லீ பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது, சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது. ஹாங்காங் என்றுமே என் மனதில் இருக்கும். தங்கள் தாய் நாட்டுடன் ஹாங்காங் இணைந்த பிறகு ஹாங்காங் மக்கள் தலைவர்களாகி விட்டார்கள்.

பல குழப்பங்களுக்கும் பிறகும் ஹாங்காங்கை கீழ விழ வைக்க முடியாது என்பதை சிலர் வலியுடன் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் ஹாங்காங்கின் வளர்ச்சியிலேயே நோக்கம் கொண்டுள்ளேன். ஹாங்காங் பல சவால்களையும் மீறி உயிர் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து