முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசை கண்டித்து 5-ம் தேதி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      தமிழகம்
Annamalai 2021 12 17

Source: provided

சென்னை : தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டதாக பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது. அரசு அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியை மேற்கோள் காட்டி அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். 

வடசென்னை மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். தென்சென்னையில் கராத்தே தியாகராஜன், சென்னை கிழக்கில் எம்.என்.ராஜா, மத்திய சென்னை கிழக்கில் வினோஜ் பி.செல்வம், மத்திய சென்னை மேற்கில் சக்கரவர்த்தி, சென்னை மேற்கில் கரு.நாகராஜன், வடசென்னை கிழக்கில் ஆர்.சி.பால்கனகராஜ், வேலூரில் முன்னாள் மேயர் கார்த்தி யாயினி, கிருஷ்ணகிரியில் முன்னாள் எம்.பி. நரசிம்மன் ஆகியோர் தலைமையில் நடக்கிறது. 

திருச்சி நகரில் நடக்கும் போராட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். சிவகங்கையில் எச்.ராஜா, தேனியில் மீனாதேவ், கன்னியாகுமரியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, நெல்லையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஈரோடு தெற்கில் டாக்டர் சரஸ்வதி எம்.எல்.ஏ., பாயிண்ட் மணி ஆகியோர் பங்கேற்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து