முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் திரைக்கு வரும் பேய காணோம் படம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      சினிமா
Beya-Kanom 2022 07 04

Source: provided

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிப்பில் செல்வ அன்பரசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேய காணோம்.  படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே படத்தின் வெற்றிவிழாவினை படக்குழு கொண்டாடியுள்ளது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் R. சுருளிவேல்  பேசுகையில், இப்படத்திற்கு நாயகியாக மீரா மிதுன் வந்ததிலிருந்தே பிரச்சனை செய்ய ஆரம்பித்தார். ஷீட்டிங்கில் பாதியில் கிளம்பி போய் விடுவார். திடீரென டில்லியில் இருக்கிறேன் விமான டிக்கெட் போட்டால் தான் வருவேன் என்பார். படம் பாதி எடுக்கப்பட்டு விட்டதால் அவரை மாற்ற முடியவில்லை, அவரை  போன்ற ஒருவரை வைத்து கொண்டு  இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தது மிகப்பெரிய விசயம். இப்படத்திற்கு பல தடைகள் வந்தது அதையெல்லாம் கடந்து இன்று படத்தை முடித்துள்ளோம் அதற்காக தான் இந்த வெற்றி விழா என்றார். பின்னர் இயக்குநர் செல்வ அன்பரசன் பேசினார். அப்போது அவர், நான் செய்த மிகப்பெரிய தவறும் மிகப்பெரிய சரியும் நடிகை மீரா மிதுனை நாயகி ஆக்கியது தான். பேயாக காட்ட மீரா மிதுன் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன் ஆனால் அவருக்கும் எனக்கும் வந்த முதல் நாளே சண்டை என பேசி முடித்தார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!