முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷின்சோ அபே படுகொலை: இந்தியாவில் இன்று துக்கம் அனுஷ்டிப்பு: பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2022      இந்தியா
modi-2022 06 30

Source: provided

டோக்கியோ : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிக்கிறது.

ஷின்சோ அபே, உலகளாவிய தலைவராகவும் தன்னிகரற்ற தலைவராகவும், மிகச் சிறந்த நிர்வாகியாகவும் இருந்தவர். ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேவின் படுகொலைக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் நாட்டில் இன்று (ஜூலை 9ம் தேதி) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து