முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப். 30-ல் வெளியாகும் பொன்னியின் செல்வன்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2022      சினிமா
Ponniyin-Selvan 2022 07-11

Source: provided

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் மணிரத்னம், நான் கல்லூரியில் படிக்க ஆரம்பிக்கும் போது இந்த புத்தகம் படித்தேன். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் நெஞ்சை விட்ட நீங்கவில்லை. கல்கிக்கு முதல் நன்றி. இப்படம் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் நடிக்க வேண்டியது. ஆனால், முடியாமல் போனதற்கான காரணம் இன்று புரிந்தது. எங்களுக்காக விட்டு சென்றிருக்கிறார். எவ்வளவு பேர் முயற்சித்திருக்கிறார்கள். நானும் 3 முறை 1980 களில் இருந்து முயற்சி செய்து இன்று தான் முடித்திருக்கிறேன். இங்கு உள்ளவர்கள் அனைவராலும் தான் இது சாத்தியமானது. இவர்கள் இல்லையென்றால், இது சாத்தியமில்லை. முக்கியமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி என்றார். லைகா தமிழ்குமரன் பேசும்போது, இப்போது டீசர் மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. இன்னும் டிரைலர், இசை வெளியீடு என்று செப்டம்பர் 30 படம் வெளியாகும் வரை நிறைய இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து