முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க ஆம் ஆத்மி முடிவு: கெஜ்ரிவால்

சனிக்கிழமை, 16 ஜூலை 2022      இந்தியா
Kejriwal 2021 08 04

Source: provided

புதுடெல்லி : ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகார குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பதாக கூறியது.

அதன்படி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. திரௌபதி முர்மு மீது மரியாதை இருந்தாலும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து